செய்திகள்

ஷங்கர் இயக்கத்தில் விஜய்?

இயக்குநர் ஷங்கர் நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் 'லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்தியன் - 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வரும் ஷங்கர், விஜய்யை சந்தித்து அரசியல் கதை ஒன்றை சொன்னதாகவும் அது விஜய்க்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளை அவர் துவங்கச் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், நண்பன் திரைப்படத்திற்குப் பின் ஷங்கர் - விஜய் கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT