செய்திகள்

மெளன ராகம் நடிகையின் புதிய தொடர்.. இதயம்! எந்த டிவியில் தெரியுமா?

ஜனனி அசோக் குமார் பல தொடர்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

DIN

மெளன ராகம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஜனனி அசோக் குமார் நடிப்பில் புதிய தொடர் உருவாகவுள்ளது. 

இதயம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடர் எந்தத் தொலைக்காட்சியில் வெளியாகும் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தற்போது முக்கிய அறிவிப்பை இதயம் குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதயம் தொடரின் பூஜை இன்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. ராஜம்மாள் கிரியேஷன் தயாரிப்பில் உருவாகவுள்ள இதயம் தொடரை ராஜ் குமார் இயக்குகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் தொடரை இயக்கியவர். 

இதயம் தொடரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனனி அசோக் குமார் பல தொடர்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழின் செம்பருத்தி, விஜய் தொலைக்காட்சியின் மெளன ராகம் -1, மெளன ராகம் -2, நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, காற்றுக்கென்ன வேலி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

பல தொடர்களில் துணை பாத்திரமாக நடித்து வந்த ஜனனி, முதல்முறையாக இதயம் தொடரின் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பல நாள் கனவு நனவாகியுள்ளதாக ரசிகர்கள் ஜனனிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இஎஸ்ஐ பதிவு செய்யத் தவறியவா்களுக்கு ஸ்பிரி திட்டத்தில் வாய்ப்பு’

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கழிவுகளால் பாழாகும் பாலாறு: தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

SCROLL FOR NEXT