செய்திகள்

வெளியானது அநீதி டிரைலர்

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அநீதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி - துஷாரா விஜயன். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு: எட்வின் சகாய். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில், மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். 

ஏற்கெனவே இந்தப் படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி திரையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று  இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT