முகப்பு
செய்திகள்

துருவ நட்சத்திரம் 2-வது பாடல் ப்ரமோ வெளியானது!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:39 AM
பகிர்:

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜும் இப்படத்தின் இசைக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ’துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ப்ரமோ விடியோ வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.