எதிர்பார்பைத் தூண்டும் கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செய்திகள்எதிர்பார்பைத் தூண்டும் கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
மேலும், வருகிற ஜூலை 28 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில், அதிரடியாக உருவாகியுள்ள டீசர் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க: மாவீரன் - வசூலில் அசத்தும் சிவகார்த்திகேயன்!
குறிப்பாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “ஜூலை 28-ல் சம்பவம் இருக்கு. கில்லர் கில்லர்” என்றும் நடிகர் ஜான் கோக்கன், “ இதற்கு முன் இப்படியான ஒன்றை பார்த்திருக்க மாட்டீர்கள். ஜூலை 28 - ல் கண்டிப்பாக புல்லரிக்கும்” என்றும் பதிவிட்டுள்ளனர். இதனால், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.