செய்திகள்

இதுதான் ஜெயிலர் கதையா?

ஜெயிலர் திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து மேலோட்டமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முக்கியக் குற்றவாளி ஒருவர் மத்திய சிறை ஒன்றில் இருக்கிறார். அவர் சிறைக்குள் இருப்பதால் அவரைச் சார்ந்த மற்ற கேங்க்ஸ்டர்களுக்கு பிரச்னை வருகிறது. இதனால், அந்த முக்கியக் குற்றவாளியை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதை ஜெயிலரான ரஜினி எப்படி தடுக்கிறார் என்பதே மீதிக்கதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 17% அதிகரிப்பு

விவசாயி வீட்டில் ரூ. ஒரு லட்சம் திருட்டு

தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT