இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க: இதுதான் ஜெயிலர் கதையா?
இந்நிலையில், வெளியான 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாளில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த(ரூ.35 கோடி) திரைப்படமாகவும் மாவீரன் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.