முகப்பு
செய்திகள்

தலைவி ரிட்டர்ன்ஸ்: 11 வாரங்களுக்குப் பிறகு அமலா பால் பகிர்ந்த புகைப்படங்கள்! 

நடிகை அமலா பால்  இன்ஸ்டாகிராமில் 11 வாரங்களுக்குப் பிறகு புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல இணைய்த்தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் அமலா பால் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருகிறார்கள். 11 வாரங்களாக புகைப்படங்களை பகிராமலே இருந்தார். கடைசியாக ஏப்.29இல் பதிவிட்டிருந்த அமலாபால் நேற்றிரவுதான் மீண்டும் புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார். 

பயணம் செய்வதில் மிகவும் விருப்பமுடைய அமலா பால் பகிர்ந்த புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள், “தலைவி ரிட்டர்ன்ஸ்”, “குயின் வந்து விட்டாள்” என கமெண்ட் செய்து ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறார்கள். 

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுத்துள்ளார்கள். இதில் அமலா பால் ப்ரித்விராஜுடன் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அதோ அந்தப் பறவை போல திரைப்படமும் வெளியீட்டிற்கு காத்திருப்பில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.