சமந்தா 
செய்திகள்

தியானமே என் வலிமை! ஆசிரமத்தில் சமந்தா!

ஓராண்டுக்கு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. 

DIN

நடிகை சமந்தா கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

தியானமே என் வலிமை எனக் குறிப்பிட்டு சமந்தா பதிவிட்டுள்ள படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பல ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, சில படங்களுக்கு செய்திருந்த முன்பதிவுத் தொகையையும் திருப்பி அளித்து, நடிப்பதிலிருந்து தற்காலிகமாக (ஓராண்டு) ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மற்ற பக்தர்களுடன் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தற்போது தியானமே என் வலிமையின் ஆதாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கழுத்தில் மாலை அணிந்தவாறு வெள்ளை உடை அணிந்து சமந்தா தியானம் செய்யும் புகைப்படங்களுடன், மயில் நடனமாடுவது, மலைகளுக்கு நடுவில் வானவில் தோன்றுவது போன்ற படங்களையும் இணைத்துள்ளார்.

சமந்தா தற்போது தனது நிம்மதியை ஆன்மிக வழியாக கண்டடையும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அவர் எந்த வழியைத் தேர்வு செய்தாலும், முழுவதும் குணமடைந்து மீண்டும் திரைத் துறைக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT