செய்திகள்

லியோ டிரைலர் எப்போது?

லியோ இசைவெளியீட்டு விழா மற்றும் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது. 

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், வருகிற செப்டம்பர் மாதத்தில் லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். டிரைலரும் அதே தேதியில் வெளியாகவே அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT