நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேலுடன் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், ரஜினியின் 172-வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | புராஜக்ட் கே - அமெரிக்காவில் கமல்ஹாசன்!
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் முடித்துள்ள நிலையில், ரஜினியின் படத்தை இயக்கவுள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.