செய்திகள்

கங்குவா கிளிம்ஸ் விடியோ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை நடிகர் சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை - 23) வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT