சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்?
நடிகை கீர்த்தி சுரேஷ் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் சில ஆண்டுகளிலேயே தெலுங்கு படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் படத்தில் நாயகியாக அறிமுகமான கீர்த்திக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது ரஜினி முருகன் திரைப்படம். அதன்பின், தொடரி, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் மாமன்னனிலும் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும், அட்லி தயாரிப்பில் ஹிந்தி ரீமேக்கான ‘தெறி’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம்: சிவகார்த்திகேயன்
இந்நிலையில், மாமன்னன் வெற்றிப்படமாக அமைந்ததால் ரூ.2 கோடியாக இருந்த தன் சம்பளத்தை ரூ.3 கோடியாக கீர்த்தி சுரேஷ் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.