செய்திகள்

மறுவெளியீட்டில் வேட்டையாடு விளையாடு வசூல் இவ்வளவா?

வேட்டையாடு விளையாடு திரைப்படம் மறுவெளியீட்டில் வசூலித்த தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன்  வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது.

சென்னையில் வெளியான திரைகளில் முதல்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.

மேலும், இப்படம் வெளியான சில திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இப்படம் மறுவெளியீட்டில் ரூ.1 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT