இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியான 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாள்களில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த(ரூ.35 கோடி) திரைப்படமாகவும் மாவீரன் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டில் வேட்டையாடு விளையாடு வசூல் இவ்வளவா?
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மடோன் அஷ்வின், ‘மாவீரன் திரைப்படத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி சம்பளமாக ஒரு ரூபாயைக் குட பெறவில்லை.’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், ‘எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டியிருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. நான் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க விருப்பப்படுகிறேன். விரைவில் அது நடக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.