செய்திகள்

ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல: வெளியானது வித்தைக்காரன் டீசர்!

நடிகர் சதீஷின் நடிப்பில் உருவாகியுள்ள வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானவராக மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தனுஷுடன் நையாண்டி, விஜய்யுடன் கத்தி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என வரிசையாக அவர் நடித்த நகைச்சுவை படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சதீஷ் நடிப்பில் தற்போது வித்தைக்காரன் படம் உருவாகியுள்ளது. கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள இந்தப் படத்தினை வெங்கி எழுதி இயக்கியுள்ளார். இவர் மாஸ்டர், விக்ரம் படங்களில் அசோஸியேட் இயக்குநராக வேலைப் பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அறிமுக நாயகி சிம்ரன் குப்தா நடித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ளார். ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மெட்ராஸ் பட புகழ் பாவெல் நவகீதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். மேஜிக் செய்பவராக நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இதில் வரும் ‘ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல’ வசனம் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னையில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடி மீட்பு

SCROLL FOR NEXT