செய்திகள்

15 வினாடிகளில் விற்றுத்தீர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா டிக்கெட்கள்!

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளதால் இதற்கான அனுமதி சீட்டுகளுக்கான விற்பனை, நேற்று மதியம் 1 மணிக்கு இணையத்தில் துவங்கியது.

1000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இருப்பினும், முன்பதிவு துவங்கிய 15 வினாடிகளிலேயே மொத்த சீட்டுகளும் விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பேருந்து நிறுத்தங்களில் தங்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT