தமிழில் '18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களிலும் கவனத்தைப் பெற்றார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி பிரபல ஸ்டாண்ட்அப் காமெடியரான அரவிந்த்வுடன் உறவிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தும் அரவிந்த்தின் காமெடிக்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். காயத்ரியும் அரவிந்த்தும் காதலிப்பதாக சமீப காலமாக தகவல் கசிந்தாலும் இதுகுறித்து இருவரிடமிருந்தும் எந்த மறுப்புகளும் வரவில்லை.
இதையும் படிக்க: 7ஜி ரெயின்போ காலனி - 2: விரைவில் படப்பிடிப்பு!
ஆனால், தற்போது இருவரும் உறவிலிருப்பதை காயத்ரிக்கு நெருங்கிய ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.