செய்திகள்

அமேசானில் முதலிடம் பிடித்த ஐஸ்வர்யா மேனனின் ஸ்பை! 

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள ஸ்பை திரைப்படம் தற்போது அமேசானில் முதலிடம் பிடித்துள்ளது. 

DIN

சிஎஸ். அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார். ‘தமிழ்ப்படம் 2‘ அவருக்கு நல்ல பெயரினையும் கவனத்தையும் தமிழ் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தன. 

அடுத்து ஹிப் ஆதியுடன் நான் சிரித்தால் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் அவர் தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தாவுடன் நடித்த ஸ்பை எனும் தெலுங்கு திரைப்படம் ஜூன் 29இல் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரத்தில் ஸ்பை படம்தான் முதலிடத்தில் உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நெட்பிளிக்ஸில் மாமன்னன் முதலிடம் பிடிக்க அமேசானில் ‘ஸ்பை’ முதலிடம் பிடித்துள்ளது. இரண்டிலும் தமிழ் நடிகர்கள் நடிகைகள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

SCROLL FOR NEXT