முகப்பு
செய்திகள்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
பகிர்:

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 6) மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →