செய்திகள்

உண்மையை பேசினால் பிரச்னைகள்தான்: ட்விட்டரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய சித்தார்த்! 

நடிகர் சித்தார்த் தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினேன் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். 

DIN

இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் சித்தார்த் . பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது. பின்னர் தமிழில் எதுவும் வெளியாகவில்லை. 

தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார். இவருடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும். 

தற்போது பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் அருண்குமார் இயக்கத்தில் ‘சித்தா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். 

பிரதமர் மோடிக்கு ஆதரவாக சாய்னா நேவால் பதிவிட்ட பதிவிக்கு சித்தார்த் கூறிய மறுமொழி பதிவில் அவரை கிண்டல் செய்ய உபயோகித்த மொழியால் ஆபாசமாக பேசியதற்காக அவரை பலரும் கண்டித்ததனர். இது 2022இல் ஜனவரியில் நடந்தது. இந்தப் பிரச்னையோடு சித்தார்த் ட்விட்டரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள புதிய படம் ‘டக்கர்’. சித்தார்த்க்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 9இல் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் ஆங்கில செய்தி சேனலில் பேட்டி கொடுத்தார். இதில் ஏன் ட்விட்டரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். 

சித்தார்த் கூறியதாவது: 

சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை. ஆனால் நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். நடிகராக நான் இதை எப்போது செய்து வருகிறேன். ஆனால் எனது உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. அந்த சம்பவங்கள் குறித்தும் யாரும் பேசுவதில்லை. நான் மட்டுமே பேசி வந்தேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் நான் மட்டுமே குரல் கொடுக்க முடியாதல்லவா. நான் சூப்பர் ஹீரோ இல்லை. உணைமையை பேசி பிரச்னைகளில் மாட்டிக்கொண்டுள்ளேன். எனக்கு இது பிடிக்கவில்லை. பல இயக்குநர்கள் என் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT