முகப்பு
செய்திகள்

இந்தியன் 2: கமலுக்கு மெயின் வில்லன் இவர்தானா?

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மெயின் வில்லனாக பிரபல நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

இந்தியன் 2: கமலுக்கு மெயின் வில்லன் இவர்தானா?

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மெயின் வில்லனாக பிரபல நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:04 PM
பகிர்:

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மெயின் வில்லனாக பிரபல நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாகவும், அவரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இணையத்தில் தகவல் கசிந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →