செய்திகள்

கங்கனா ரணாவத் படத்தை நான் இயக்கவில்லை: அயோத்தி இயக்குநர்

மாதவன் - கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் மந்திரமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

DIN

மாதவன் - கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் மந்திரமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில், நடிகர் மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், அப்படத்தை அயோத்தி படத்தை இயக்கிய மந்திர மூர்த்தி இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாதவன் - கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் மந்திரமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக மாதவன் - கங்கனா இருவரும் ’தனு வெட்ஸ் மனு’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT