தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையும் படிக்க: புகழுக்கு பின்னாலிருக்கும் கடின உழைப்பை யாரும் பார்ப்பதில்லை: ஷாருக்கானின் அசத்தல் பதில்!
இதையும் படிக்க: பாயும் ஒளி நீ எனக்கு: டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படங்கள் 2 மணி நேரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.
உடலை ஃபிட்டாக வைக்கும் தமன்னாவின் அழகினை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர், “பல லட்சக்கணக்கான மக்களின் கனவுக் கன்னி தமன்னா” என கமெண்ட் செய்துள்ளார்.
இந்தப் புகைப்படத்திற்கு பலரும் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.