முகப்பு
செய்திகள்

மீண்டும் மிரட்ட வருகிறார் ரைட்டு: வெளியானது தலைநகரம் 2 பட டிரைலர்

சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:06 PM
பகிர்:

சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் சுந்தர் சி. 2006ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் வடிவேலு நாய்சேகர் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். 

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி-யே நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.இசட்.துரை இயக்கும் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.