செய்திகள்

கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர்: நடிகை ஆண்ட்ரியா

கோவையில் ஜூலை 1 ஆம் தேதி நடிகை ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. 

DIN

கோவையில் ஜூலை 1 ஆம் தேதி நடிகை ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. 

கோவையில் ரெட்நூல்  நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரியில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசைக்கச்சேரி வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி  நடைபெறுகிறது.

இந்த இசைக் கச்சேரி குறித்து சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆண்ட்ரியா, 

'கோலாலம்பூரில் கடைசியாக என் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து கோவையில் வரும் 1 ஆம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும்,  நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெற உள்ளது.

கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம்.  நடிப்பு, பாடல் எதுவுமே எளிமையானது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் வகுப்புக்கு சென்றதால் தற்போது எளிதாக பாடுகிறேன். நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை' என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT