செய்திகள்

நடிகர் மகேஷ் பாபு படத்திலிருந்து தமன், பூஜா ஹெக்டே விலகல்? 

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார். எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். நடிகைகள் ஸ்ரீ லீலா, பூஜா ஹக்டே, நடிகர் ஜகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இருந்தது.  

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மகேஷ்பாபுவிற்கு படத்தின் டைட்டில் அறிமுக விடியோவில் தமனின் இசை பிடிக்கவில்லை அதனால் படத்திலிருந்து விலக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளர் தமனிற்கு பதிலாக அனிரூத் இசையமைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

SCROLL FOR NEXT