செய்திகள்

பிரபாஸ் படத்தில் இணைந்த கமல்ஹாசன்: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!  

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பளமாக கமல் தரப்பிலிருந்து 20 நாள்கள் நடிக்க ரூ.150 கோடி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் படக்குழு கமல்ஹாசன் இணைந்ததை விடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அம்தாப் பச்சன், தீபிகா படுகோன் இணைந்துள்ளதை படக்குழு தெரிவித்துள்ளது. 

வைஜெயந்தி மூவிஸின் 50வது வருடத்தில் உருவாகும் இந்தப் படத்தினை இயக்குகிறார் நாக் அஸ்வின். மகாநடி படத்தினை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில திறன் மேம்பாட்டு போட்டிகள்

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறை

கும்பகோணத்தில் திமுக மகளிரணிக்கு தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி

கிழக்கு தில்லியில் நெரிசலைக் குறைக்க சாத்தியக்கூறு ஆய்வு: பொதுப்பணித் துறை திட்டம்

SCROLL FOR NEXT