வெற்றிமாறன் 
செய்திகள்

விஜய்யை வைத்து புதிய படம்: இயக்குநர் வெற்றிமாறன்

விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

DIN

விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.

இவர், விடுதலை முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து, விடுதலை 2 படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், வடசென்னை இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரும். அதற்கு முன் இரண்டு ஒப்பந்தங்கள் உள்ளது. அதை முடித்துவிட்டு  வடசென்னை 2 இயக்குவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், சர்க்கரையை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளேன். அதற்காக அவருடன் பேசி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT