இரு சக்கர வாகனத்தில் சென்ற கன்னட நடிகர் சுரஜ் குமார், சாலை விபத்தில் சிக்கி வலது காலை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகன் சுரஜ் குமார்(வயது 24). ஐராவதா மற்றும் தராக் ஆகிய கன்னட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், அறிமுக படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உதகையில் இருந்து மைசூரு நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்த சுரஜ் குமார், கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் விபத்து நடைபெற்ற நிலையில், மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஸ்வீட் காரம் காப்பி: ஓடிடியில் வெளியாகும் புதிய இணையத் தொடர்!
சுரஜ் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வலது காலை முட்டிக்கு கீழ் அகற்றியுள்ளனர்.
கன்னட பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் குமார் உறவினரான சுரஜ் குமாரை, மருத்துவமனைக்கு நேரில் சென்று சிவராஜ்குமார் நலம்விசாரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.