செய்திகள்

மாமன்னன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்!

மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் இதுவாகும்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட செய்தி:

“மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT