முகப்பு
செய்திகள்

புஷ்பா 2-ல் சாய் பல்லவி

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாகும் புஷ்பா -2 படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாகும் புஷ்பா -2 படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.

மேலும், வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.

இப்படத்தின் 2 பாகத்திற்காக பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தற்போது ‘புஷ்பா 2 - தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்,  ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் தகவல்.

முழு கட்டுரையைப் படிக்க →