'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்!
இந்தியன் 2 படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் குழுவை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
செய்திகள்'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்!
இந்தியன் 2 படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் குழுவை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் குழுவை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியன் - 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாள்கள் நடைபெற உள்ளதால் பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்திற்கான பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சி குழுவினரை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.