சம்பளத்தைக் குறைத்த சிவகார்த்திகேயன்?
நடிகர் சிவகார்த்திகேயன் தன் சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்' திரைப்படம் பெரிய தோல்வியை அடைந்தது. பிரின்ஸ்க்கு முன் வெளியான டான் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் - 2 முதல் பாடல் அறிவிப்பு!
இதனால், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்றும் அவர் சம்பளத்திலிருந்து ரூ.5 கோடியைக் குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.