மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரெட் கேமரா வகைகளில் அதிநவீன கேமராவான ‘வி ராப்டார் எக்ஸ் எல்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் பனி காரணமாக காட்சிகளை துல்லியமாக எடுக்க இந்தக் கேமராவை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா தேர்ந்தெடுந்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். 57 வயதான பாபு ஆண்டனி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட இந்தியப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிற்கு தந்தையாகவும் பொன்னியின் செல்வன் படத்தில் ராஷ்டிரகூட அரசராக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.