செய்திகள்

’இந்தியன் 2’ பிரம்மாண்ட சண்டைக்காட்சி.. இந்த நாட்டிலா படப்பிடிப்பு?

இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரயிலில் நடக்கும் முக்கியமான சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளதாகவும் அங்கு 15 நாள்கள் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

தக்கலை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் காா் மோதி உயிரிழப்பு

வணிகா்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: ஏ.எம். விக்கிரமராஜா

குளித்தலையில் தனியாா் பேருந்தும், மினி பேருந்தும் மோதல்: 28 போ் காயம்

SCROLL FOR NEXT