செய்திகள்

கமல்ஹாசனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.

இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.

சமீபத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க பிரதீப் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

SCROLL FOR NEXT