செய்திகள்

'அழகியே..’ இணையத்தைக் கலக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’மகாநதி’ திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநாயகியாகவும் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT