செய்திகள்

எம்சியூ ,எல்சியூ இதுதான் வித்தியாசம்: வைரலாகும் மீம்ஸ்! 

இயக்குநர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் படங்களுக்கான வித்தியாசம் இதுதான் என ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

எல்சியூ என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எம்சியூ என்பது மணிரத்னம் சினிமாட்டிக் யுனிவர்ஸ். பொன்னியின் செல்வன்-2 படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது.

இதில் த்ரிஷா கையில் வாழுடன் நிற்கும் காட்சிகளும் எதிரில் நடிகர் கார்த்தி கண்களை கட்டி மணிடியிட்டு இருப்பது போல போஸ்டர் வெளியானது. இந்தப் போஸ்டரில் த்ரிஷாவின் அழகினை பலரும் புகழ்ந்து வரும் நிலையில் புதிய டிரெண்ட் ஆரம்பித்துள்ளது. 

இந்தப் போஸ்டரில் கார்த்தியின் தலைகள் துண்டிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட போஸ்டரை எல்சியூ எனக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். காரணம் லோகேஷின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கும். விக்ரம் படத்தில் நடிகை காயத்ரியின் தலை துண்டிக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். 

தற்போது லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்து வருவதால் இந்த இரண்டு படங்கள் பற்றியும் பேச்சு எழத்தொடங்கியுள்ளது. லோகேஷின் படங்களில் கதாநாயகிகள் வந்தாலே இறந்துவிடுவார்கள் என ரசிகர்கள் முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 படமும், அக்டோபர் மாதம் லியோ படமும் வெளியாக உள்ளது. இரண்டு பெரிய படங்களில் த்ரிஷா நடித்திருப்பதால இந்தாண்டு த்ரிஷாவிற்கு சிறந்தாண்டாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT