செய்திகள்

விமான நிலையத்தில் ராம் சரணுக்கு பூத்தூவி வரவேற்பு: வைரலாகும் விடியோ!

ஆர்ஆர்ஆர் பாடல் ஆஸ்கர் விருதை வென்றதற்காக நடிகர் ராம்சரணுக்கு ரசிகர்கள் வாழ்த்து பூத்தூவி தெரிவித்தனர். 

ANI

சிறந்த மூலப்பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின்  ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கீரவாணிக்கும், படக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நேற்று ராம்சரண், சிரஞ்சீவி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமித்ஷா, “இந்திய சினிமாவின் இரண்டு லெஜெண்டுகளான ராம்சரண். சிரஞ்சீவியை சந்தித்தில் மகிழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரம், வணிகத்தில் தெலுங்கு சினிமாவின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆஸ்கர் விருது வென்றதற்கும், ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கும் ராம்சரணுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார். 

பின்னர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம், “நாட்டு நாட்டு பாடலையும் ஆர் ஆர் ஆர் படத்தினை வெற்றி பெற செய்ததற்கும் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் அதாவது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்துப் பகுதி மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. கீரவாணி, ராஜமௌலி ஆகியோரை நினைத்து பெருமையாக உள்ளது. அவர்களது கடின உழைப்பினாலே ஆஸ்கர் விருது கிடைத்தது. 

இந்நிலையில் ஹதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் செல்லும்போது ரசிகர்கள் பூத்தூவி வாழ்த்து தெரிவித்தனர். ட்விட்டரில் இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT