செய்திகள்

ஒரு இலட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையுடன் ஆலியா பட்: வைரல் புகைப்படம் 

நடிகை ஆலியா பட் ஒரு இலட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

ஹிந்தியில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆலியா பட். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவான ‘கங்குபாய் கத்தியாவடி’ எனும் படம் நல்ல வரவேற்பினை தந்தது. மும்பை காமத்திபுராவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் மறைந்த கங்குபாயின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. 2022இல் வெளியான ஆர்ஆர்ஆர், டார்லிங்ஸ், கங்குபாய் கத்தியாவடி படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. 

பிரமாஸ்திரம் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. சமீபத்தில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடிபெற்று வருகிறது. 

இந்நிலையில், அமெரிகாவிலுள்ள மெட் காலா எனும் ஆடை அலங்காரம் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆலியா பட் கலந்து கொண்டார். இதில் ஒரு இலட்சம் முத்துக்கள் பதித்த ஆடையை அணிந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆலியா பட் இது குறித்து, “ஒரு இலட்சம் முத்துகளாலான ஆடையை அணிவதில் பெருமையாக உணர்கிறேன். இது தொழிலாளர்களின் அன்பை குறிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT