செய்திகள்

பீட்டர் பால் எனது கணவரல்ல; நான் அவரது மனைவியும் அல்ல: வனிதா அதிரடி 

நடிகை வனிதா விஜயகுமார் மறைந்த பீட்டர் பாலை தனது கணவர் அல்ல என கூறியுள்ளார். 

DIN

சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இரங்கல் தெரிவித்திருந்தார். 

வனிதாவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர்பால் என்பவருடன் கிறிஸ்துவ முறைப்படி 3வது திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. தனது யூடியூப் சேனலுக்கு உதவியதாக பீட்டர்பால் அறிமுகமாகியதாக வனிதா தெரிவித்திருந்தார். பின்னர் 2020லேயே இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் இருந்த பீட்டர்பால் சமீபத்தில் காலமானார்.ஊடகங்கள் வனிதாவின் கணவர் இறந்துவிட்டார் என கூறியதால் வனிதா கவலையுற்றதாக தெரிகிறது.  

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இந்த விஷயத்தைப் பற்றி பேசலாமா வேண்டாமா என யோசித்தப் பிறகே வேறு வழியின்றி இதை சொல்கிறேன். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பணிவான கோரிக்கையாக தெரிவிப்பதாவது, “அதிகாரபூர்வமாக நான் பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை. 2020இல் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்; அதே வருஷம் பிரிந்தும் விட்டோம். நான் அவரது மனைவியும் அல்ல. அவர் என்னுடைய கணவரும் அல்ல. நான் அதிகாரபூர்வமாக தனியாக இருக்கிறேன். எனக்கு கணவர் யாருமில்லை. எந்த இழப்பினை நினைத்தும் வருத்தமில்லை. எனது வாழ்க்கையை ரசித்து வாழ்கிறேன்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என அறிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT