யூடியூப் தளத்தில் அதிகம் கேட்கப்பட்ட மலையாள பாடல் பட்டியலில் ஹிரிதயம் படத்தில் இடம்பெற்ற தர்ஷனா பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மோகன்லால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ’ஜிமிக்கி கம்மல்’ பாடலே இதுவரை யூடியூபில் அதிகம் கேட்கப்பட்ட(110 மில்லியன் பார்வைகள்) மலையாளப் பாடலாக இருந்து வந்தது.
இந்நிலையில், இப்பாடலின் சாதனையை மோகன்லால் மகன் முறியடித்துள்ளார். மோகன் லால் மகனான பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தர்ஷனா’ பாடல் யூடியூபில் 111 மில்லியன்(11 கோடி) பார்வைகளைக் கடந்து இதுவரை அதிகம் கேட்கப்பட்ட மலையாள பாடல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிக்க: மாவீரன் வெளியீட்டுத் தேதி மாற்றம்?
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.