நடிகராகும் லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கிய இயக்குநராக கவனிப்படுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராகவும் உள்ளார்.
இந்நிலையில், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் விரைவில் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாகும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் நாயகனாக இசையமைப்பாளர் அனிருத் நடிப்பார் என்றும் தகவல்!