செய்திகள்

கல்யாணம் முடிச்சிட்டுதான் சம்பவம்... : இராவண கோட்டம் படத்தின் புதிய விடியோ வெளியீடு!

ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இராவண கோட்டம் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல இயக்குநர் நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சோனி இணையத் தொடரில் (ஸ்டோரி ஆஃப் திங்ஸ்) ஒன்றிலும் நடித்துள்ளார். 

தற்போது, கண்ணன் ரவி தயாரிப்பில் ‘இராவண கோட்டம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை ‘மதயானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். 

இந்தப்படத்தின் டிரைலர் நல்ல கவனம் பெற்றது.மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் ஷாந்தனு-கயல் ஆனந்தி ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

SCROLL FOR NEXT