முகப்பு
செய்திகள்

டியர் சாய் பல்லவி...நீங்கள் ஆகச் சிறந்தவர்... : சாய் பல்லவியை புகழ்ந்த இயக்குநர்! 

நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புகழ்ந்து பேசியுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் அவருக்கு  தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.  நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி பிறந்தநாளன இன்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 

பிறந்தநாள் வாழ்த்துகள் டியர் சாய் பல்லவி. நீங்கள் ஆகச் சிறந்தவர்; கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் சிறந்ததாகவே கொடுக்கட்டும். நீங்கள் என் படத்தில் இருப்பதிற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். படத்தின் பூஜையில் இருந்ததற்கு நன்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.