செய்திகள்

என் காதலிகளை மறக்கவில்லை: பாரதிராஜா

மாடர்ன் லவ் சென்னை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் பாரதிராஜா தன் காதல்கள் குறித்துப் பேசியுள்ளார்.

DIN

மாடர்ன் லவ் சென்னை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் பாரதிராஜா தன் காதல்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவீனயுக காதல் கதைகளை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆந்தாலஜி வகை இணையத் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஏற்கனவே, ’மாடர்ன் லவ் மும்பை’, ’மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகிய சீரியஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி மாடர்ன் லவ் சென்னை தொடரும் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், நடிகர் பாரதிராஜா, ‘இத்தொடரின் மூலம் தியாகராஜா குமாரராஜா என்கிற நல்ல நண்பன்  கிடைத்தான். என்னைப் பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. 9-வது படிக்கும்போது அப்படி எனக்கு ஒரு காதலி இருந்தாள். பின், சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை 4 நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன். ஆனால், அவர்களை(காதலிகளை) என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. எனக்கு நிழல் தந்த குடைகள் அவர்கள். இறப்பதற்குள் இன்னும் சிறந்த படத்தை இயக்க வேண்டும்’ என உருக்கமாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT