செய்திகள்

சிம்பு 48வது படத்தில் தீபிகா படுகோன்? 

சிம்புவின் 48வது படத்தில் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். 

சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிகாரபூர்வ தகவல் வெளியாகத நிலையில் இது குறித்து விரைவில் அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தீபிகா படுகோன் நடித்தால் இது அவருக்கு இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT