அன்னையர் தினத்தில் வெளியான ஊர்வசியின் புதிய போஸ்டர்!
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஊர்வசியின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். அவரத் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடக்ஷனில் வெளியான பரியேறும் பெருமாள், சார்பட்டா, ரைட்டர், குண்டு போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் பட இயக்குநருடன் இணையும் துல்கர் சல்மான்!
Advertisement
Advertisement
சுரேஷ் மாரி இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - டோனி பிரிட்டோ. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது.
தற்போது அன்னையர் தினத்தினை முன்னிட்டு ஊர்வசிக்கு வாழ்த்து தெர்விக்கும் விதமாக படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.