முகப்பு
செய்திகள்

ஜிகர்தண்டா 2: புதிய விடியோவுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை தெரிவித்தார். பின்னர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தனர்.  

இசை- சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு- எஸ். திருநாவுக்கரசு. சண்டைப் பயிற்சி- திலிப் சுப்பராயன். 

வேகமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படக்குழு ரிலீஸ் தேதி பற்றி விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு இந்தப்படம் வெளியாகுமென அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →